Friday, October 25, 2013

கொரியன் இங்கிலீஷ்

நண்பர்களில் சிலருக்கு  கொரியனுடன் வேலை செய்த அனுபவம் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்ல வரும் விஷயம் பழகிய ஒன்றாக இருக்கும்.

ஆனால் ஒரு korean ஆங்கிலம் பேசுவதை முதல் முறை பார்ப்பவர்கள் பொறை ஏற சிரித்து வயிற்று வலிக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது இருக்கும்.

நான் இதற்க்கு முன்பு வேலை செய்த கம்பனி ஒரு German based MNC. நாங்கள், காருக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து அநேகமாக உலகத்தில் உள்ள அனைத்து கார் கம்பனிகளுக்கும் supply செய்து வந்தோம்.

MNC என்பதனால் எந்த ஒரு event ஐயுமே உலகத்தரத்தில் செய்ய (செய்வது போல காட்ட) முயற்சி செய்வது எங்கள் வழக்கம்.

ஒருமுறை ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் புதிய காருக்கான பாகங்களை supply செய்வதற்கான ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்தது. அதன் launch ப்ரோக்ராம் எங்கள் தொழிற்சாலை வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹூண்டாய் சார்பாக அதன் உச்ச பதவியில் உள்ள கொரியன்கள் பலர் விழாவிற்கு வருவர். ஆகவே அசத்திவிட வேண்டும் என்று நாங்கள் பம்பரமாய் சுத்தினோம்.(சாட்டை அப்படி).

எல்லாம் சரியாக செய்தாயிற்று. விழா ஆரம்பித்தது. எங்கள் நிறுவன பெரிய தலைகள் வரிந்து கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காகவே தாங்கள் பேச நினைக்கும் உரையை ஒரு வாரமாக தயாரித்து peterism ம்மின் உச்ச கட்டத்தை தொட்டார்கள்.

இதை கேட்டுகொண்டிருந்த எங்களுக்கே வியர்த்து விட்டது.
பேசியவர்கள் எல்லாம் தாம் பேசிய வார்த்தைகள் கொரியனின் காதுக்குள் நுழைந்து விட்டதா என்று உறுதி செய்ய தலைப்பட்டார்கள்.

நான் மெல்ல கொரியன் Team அமர்ந்து இருந்த வரிசையை நோட்டம் இட்டேன்.
நான் அந்த கம்பெனியிலிருந்து FORD நிறுவனத்திற்கான Key Accounts Manager ஆக இருந்ததால் கொரியன் குரூப் பையும் அவர்கள் வொர்க் culturum எனக்கு பழக்கம் இல்லை. சொல்லபோனால் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் என்னை அந்த நிகழ்ச்சியில் உட்கார வைத்தது.

ஒரு வழியாக எங்கள் மக்கள் எல்லாம் பேசி முடித்தார்கள். இப்பொழுது நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கொரியன்களில் ஒருவர் பேச எழுந்து வந்தார்.

அவர் பேசியதை அப்படியே தருகிறேன்.

         " Ju all indi peopilu.. very gooddu. ju speeku many many thingsu nowwu. but I naattu understand...ju indi peopilu juar engiliju big engiliju....my engiliju jmaal engiliju.. so I sorry for not understandu your saying...anywaysu juvar company goodu company.. so do gooddu supply... tans ju bery muchchu..."

2 comments:

  1. 'நல்லாருக்கு உங்க கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. திரு .நெல்லைத் தமிழன் :
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete