மோடிக்கு இரத்தினக்கம்பளத்துடன் பிரதமர் பதவி கிடைத்து இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்களுக்கு தண்ணி காட்டிய பெரும்பான்மை மோடிக்கு கிடைத்து இருக்கிறது. இது அவருக்கு அக்கினி பரீட்சைதான்.
"மண்ணு"மோகன் சிங் குக்கு கிடைத்த எஸ்கேப் பாயிண்ட் இவருக்கு இல்லை. சோனியா என் கைகளை கட்டி வைத்து இருந்தார் என்று அவர் சொல்லாவிட்டாலும் நாமாகவே சொல்லிக் கொண்டோம். அப்பாவி இமேஜை எப்படியோ காப்பாற்றி கொண்டு விட்டார். காங்கிரஸ் ஆட்சியினால் நொந்து போய் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மன்மோகன் மேல் பெரிய அதிருப்தி இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் மோடியின் நிலை அப்படி இல்லை. அவரை அப்பாவி என்றால் அவரே சிரித்துவிடுவார்.
நாடு அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதீதமானது. எப்படி இந்த நிலையை உருவாக்கினார் என்பது கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவர் வகுத்த அரசியல் வியுகங்களையும், அவரது சந்தைப்படுத்தும் திறனையும் கவனித்தவர்களுக்கு தெரியும். அதன் அடிப்படையிலேயே இந்த நிமிடம் வரையிலான அவரின் அரசியல் வரலாற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட எனது எளிய மதிப்பீட்டின்படி அவர் ஒரு சராசரிக்கு கொஞ்சம் மேலான அரசியல்வாதியே தவிர நாட்டை காக்கவந்த மீட்பர் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஒரு சராசரி அரசியல்வாதி பதவியை அடைய என்னவெல்லாம் செய்வாரோ அவை எல்லாவற்றையும் செய்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
ஆனால் அவர் நினைத்தால் வல்லரசு இந்தியாவின் சிற்பி என்ற பட்டத்தை போகிற போக்கில் தட்டி கொண்டு செல்ல முடியும். எதிர்காலத்தில் மோடியை நாம் ஜார்ஜ்வாஷிங்டன், லிங்கன், லீ க்வான் யூ வரிசையில் வைக்க கூட வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு. ஆனால் இதெல்லாம் அவருக்கு தோன்ற வேண்டும்.
ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பில் மோடி உடனடியாக கவனிக்க வேண்டியதாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
1) விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள். (இலவச இளிச்சவாயதனங்கள் அல்ல.) பாசன வசதி, சந்தையாக்கம், நதிநீர் பங்கீடு முதலியவற்றில் மத்திய அரசு அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை செய்வது.
2) இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து திடமான நேர்மையான முடிவுகள் எடுத்தல். தண்டகாரண்யம் நிலக்கரி சுரங்கம், தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுத்தல் போன்றவை சம்பந்தமாக வெள்ளை அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். Eco System பாதிக்கும் என்ற பட்சத்தில் தாட்சண்யம் பார்க்காமல் திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். காடுகள், ஆறுகள், மற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
3) இலங்கை, பாகிஸ்தான், சீனா உறவுகள் குறித்த சாத்தியங்கள் நேர்மையான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தென்னிந்தியாவிலும் தீவிரவாதம் தலைதூக்க வாய்ப்புகள் உண்டு.
4) மாநில அரசுகளோடு இணைந்து பெட்ரோல்,உணவு, மருத்துவப் பொருட்களின் விலைவாசி முறைப்படுத்தல்
5) உண்மையான, நிலையான வேலை வாய்ப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல். சுய வேலை வாய்ப்புக்கான ஒத்துழைப்பு ( ஒற்றை சாளர முறை, கடன் பெரும் முறையை எளிமை ஆக்குதல் போன்றவை)
6) பன்னாட்டு நிறுவனங்களை ஒரு வரம்புக்குள் முறைப்படுத்தி, அவற்றின் தொழிலாளர் நலன் குறித்த கொள்கைகளை தொடர்ந்து கண்காணித்தல். இதை செய்யாததால் தான் நமது வாழும் முறையில் பெரும் மாறுதல் (கேடு) அடைந்திருக்கிறது. நாம் இயந்திரங்களாக மாற்றப்பட்டு உள்ளோம். நமது நாட்டின் மொத்த மனித வளமும் சுரண்டப்பட்டு கொரியாவுக்கும், UK, US க்கும் கொளுத்த பணமாக சென்றடைகிறது. பிச்சைக்கார அரசின் அமைச்சர்கள் எலும்புத்துண்டை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு, TDS ஐ இன்னும் எப்படி எல்லாம் கறாராக வசூலிக்கலாம் என்று யோசித்து சட்டம் போடுகிறார்கள்.
7) வேளாண் நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் கொள்ளை போன்றவை மத்திய அரசின் வரம்புக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இவை அண்டை நாடுகளின் பகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு சேர்ந்து கட்டாயம் இதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இவை எல்லாம் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள்தான். ஆனால் இவை எல்லாம் மிக அவசியமானவை. துருப்பிடித்த அரசு இயந்திரம் மற்றும் அதன் அங்கத்தினர்கள் அவ்வளவு எளிதாக எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள், மாற்ற விடவும் மாட்டார்கள்.
எனக்கு கொரியன்களை பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கும். தேச பக்தியை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு அவர்களின் அலுவலகங்களில் பயன்படும் சிறிய பின் கூட கொரியா தயாரிப்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தரம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
அத்தகைய மனோ நிலை 30% இந்தியர்களிடம் இருந்தால் கூட மோடி தனது லட்சியமாக கூறிகொள்பவை மிக எளிதாக நிறைவேறி விடும்.

No comments:
Post a Comment